Wednesday 18 July 2012

IT இளைஞன்

                  
கூண்டுக்கிளி அகப்பட்டிருப்பினும் இயற்கையுடன் உறவாடிக்கொண்டிருக்கும்....
என் இளைஞனோ குளிர்சாதனக் கூண்டில் உலகறியாது உழைக்கின்றான் !!!
முதலிரவு முடிந்த கையோடு மூட்டைகட்ட முனைகிறான் கணவன்,
தன் தாய்நாட்டைக் காப்பதற்காக அல்ல, தன்னை அயல்நாட்டவனிடம் அடமானம் வைக்க.!!!
கிராம் எடை போட்டு உணவு கொடுக்கும் கேன்டீனில் நின்று ஏங்குகிறான்,
கை நிறைய, பை நிறைய பணம் இருந்து என பயன்
தன் அன்னையின் பாசமிகு கையினால் ஒரு வாய்ச் சோறு கிடைக்காதா என்று ...!!! L 
வளரும் வயதில் வயலில் இருந்தான் தகப்பன்..
ஏங்குகிறான் என் இளைஞன் , தற்பொழுது வெள்ளி நிற மயிருடன் தன் தந்தை ஓய்வெடுப்பதை ரசிக்க..!!!
கட்டபொம்மனாக வாழ வேண்டிய என் இளைஞன், இன்று பல சூழ்நிலைகளில்,  ஊமைத்துரையாக மாறுகிறான்..:-(
ஏழையின் சிரிப்பு, மனைவியின் வெட்கம், குழந்தையின் மழலை...
இவை அனைத்தும் ஒருசேர காணலாம், வெள்ளி மாலை ஊர் செல்ல இருக்கும் என் உற்சாகத் தோழனிடம் !!!!
          அன்று,
          மகிழ்ச்சியுடன் கஞ்சி குடித்தனர்....
          இன்று ,
          வெறுமையுடன் நெற்சோறு உண்கின்றனர்..!!!!
         காலம் திரும்பாது .................
        இழந்தவை மீட்கப்படாது......
        விழிதுக்கொள் என் இளைஞனே...!!!!
வாழ்க்கையை பணத்திடம் விற்றுக் கொண்டிருக்கிறாய்....
வாழக் கற்றுக் கொள் ...!!!!!!!!!!!!!!!!
                                              
நா.ஸ்ரீதர்
                            ..


2 comments:

  1. கட்டபொம்மனாக வாழ வேண்டிய என் இளைஞன், இன்று பல சூழ்நிலைகளில், ஊமைத்துரையாக மாறுகிறான்..

    வாழ்க்கையை பணத்திடம் விற்றுக் கொண்டிருக்கிறாய்....

    nice lines :)

    ReplyDelete