Sunday 2 September 2012

“என்னவளின் வர்ணனை”

சில ஆண்டுகள் மட்டுமே இந்த பூமியில் வீற்றிருக்கும் உலக அதிசயமே !!!
தற்பெருமை அடித்துக்கொண்டிருப்பான் அங்கே பிரம்மன், உன் படைப்பிற்காக...!!
தேவதைகளைக் கண்டதில்லை....இனி காணவும் இச்சம் இல்லை......!!
தென்றல் வருடுதலுக்கு இசையும் தென்னையின் நுனி போல் இசைகிறது உன் இடை...!!
மலை உச்சியிலிருந்து காணப்படும் நீரோடை வடிவம் கொண்ட உன் கேசம்...
அதில் வரும் சுவாசம்...!!!!
நல்ல வேளை நீ ஆதி காலத்தில் பிறக்கவில்லை....
பிறந்திருப்பின்.....
வள்ளுவன் திருக்குறளை தவிர்த்திருப்பான்....
கம்பன் சீதைக்கு பதில் உன்னை வர்ணித்திருப்பான்.....
சங்க காலத்து புலவர்களுக்கு கவிதைத் தலைப்பாகிருப்பாய்....!!!!!!!!
நீ ஏற்றிவைக்கும் சுடரை ஏந்த காத்திருக்கிறது என் வீட்டு குத்து விளக்கு !!!!
தியான வகுப்பிற்குச் சென்றேன்...
நெற்றியில் இஷ்ட தெய்வத்தை நிறுத்தச் சொன்னர்...
என் தேவதை உன்னை மட்டுமே என்னால் நிறுத்த இயன்றது.......!!!!!!!
ஒரு தலையாய் உன்னை காதலிக்கவே புண்ணியம் செய்திருத்தல் வேண்டும்...
உன்னால் நான் காதலிக்கப்பட்டால் ???? சொல்வதற்குச் சொல் இல்லை என்னிடம்.....!!!!!
என் மனதில் உள்ள வர்ணனைகளைத் தொகுத்துள்ளேன்....
இவை மற்றவர்களுக்கு உன் அழகினை, என் காதலைத் தெரிவிக்க....
இதனால் உனக்கு என்மேல் காதல் ஏற்படுமாயின், அது என் எழுத்துக்களைச் சார்ந்த்து....
என் காதலை நீ காதலிக்க வேண்டி காத்திருக்கிறேன்....!!!!!!!
                                                                                                               
                                                                                    நா.ஸ்ரீதர்...




மன அமைதி

                         
 வாழ்கையின் அனைத்து பரிமாணங்களிலும் மனிதனை வழிநடத்திச் செல்லும் அகல்விளக்கு வெளிச்சம் தான் மனம்...!!!
மாய உலகை தன் திரையில் படமாக்கி மெய்யாக்க விரும்பும் வினோதமான விலங்கினம் மனம்...!!!
காதலில் மாயம்,அன்பில் மாயம், நட்பில் மாயம், உறவில் மாயம், வெற்றியில் மாயம், தோல்வியில் மாயம்...அனைத்திலும் மாயம்......!!!
ஆத்திகத்தை ஆதரிப்பதா...இல்லை நாத்திகத்தை நாடுவதா.....
ஆத்திகத்தை ஆதரிக்க ஆதாரம் இல்லை....
நாத்திகத்தை நாடுவதில் நன்மை இல்லை...!!!!!
அடுத்த நொடி, அடுத்த நிமிடம்,அடுத்த நாள் அனைத்தும் மாயம்......!!!
என் பாதச் சுவடுகளை பதித்துக் கொண்டிருக்கும் வாழ்கையின் வழித்தடமும் ஒரு மாயமே...!!!
இப்படி மாயங்களின் சேர்க்கையால் சலனத்தின் உச்சத்தில் உள்ளது மனம்...
அந்த மனத்தின் அமைதியை நோக்கி நானும் சென்று கொண்டுள்ளேன்.....!!!!!!!!

                                                   நா.ஸ்ரீதர்..