Wednesday, 18 July 2012

IT இளைஞன்

                  
கூண்டுக்கிளி அகப்பட்டிருப்பினும் இயற்கையுடன் உறவாடிக்கொண்டிருக்கும்....
என் இளைஞனோ குளிர்சாதனக் கூண்டில் உலகறியாது உழைக்கின்றான் !!!
முதலிரவு முடிந்த கையோடு மூட்டைகட்ட முனைகிறான் கணவன்,
தன் தாய்நாட்டைக் காப்பதற்காக அல்ல, தன்னை அயல்நாட்டவனிடம் அடமானம் வைக்க.!!!
கிராம் எடை போட்டு உணவு கொடுக்கும் கேன்டீனில் நின்று ஏங்குகிறான்,
கை நிறைய, பை நிறைய பணம் இருந்து என பயன்
தன் அன்னையின் பாசமிகு கையினால் ஒரு வாய்ச் சோறு கிடைக்காதா என்று ...!!! L 
வளரும் வயதில் வயலில் இருந்தான் தகப்பன்..
ஏங்குகிறான் என் இளைஞன் , தற்பொழுது வெள்ளி நிற மயிருடன் தன் தந்தை ஓய்வெடுப்பதை ரசிக்க..!!!
கட்டபொம்மனாக வாழ வேண்டிய என் இளைஞன், இன்று பல சூழ்நிலைகளில்,  ஊமைத்துரையாக மாறுகிறான்..:-(
ஏழையின் சிரிப்பு, மனைவியின் வெட்கம், குழந்தையின் மழலை...
இவை அனைத்தும் ஒருசேர காணலாம், வெள்ளி மாலை ஊர் செல்ல இருக்கும் என் உற்சாகத் தோழனிடம் !!!!
          அன்று,
          மகிழ்ச்சியுடன் கஞ்சி குடித்தனர்....
          இன்று ,
          வெறுமையுடன் நெற்சோறு உண்கின்றனர்..!!!!
         காலம் திரும்பாது .................
        இழந்தவை மீட்கப்படாது......
        விழிதுக்கொள் என் இளைஞனே...!!!!
வாழ்க்கையை பணத்திடம் விற்றுக் கொண்டிருக்கிறாய்....
வாழக் கற்றுக் கொள் ...!!!!!!!!!!!!!!!!
                                              
நா.ஸ்ரீதர்
                            ..


Monday, 9 July 2012

                                            அவளின் மௌனம்

பின்லேடனை பின் தங்கவைத்த வன்முறைக்காரியே...
தினம் தினம் மௌனம் எனும் கத்தியால் என்னை கிழிக்கின்றாய் !!!
மனக்கோட்டையில் ராஜாவாக வாழ்கிறேன் ...
காத்திருக்கிறேன் கோட்டையில் என் ராணி உன் பிரவேசத்திற்காக...!!!
புரியாத மழலையிடம் மழைவெள்ளம் போல் பேசுகிறாய்...
உன் பார்வைதனில் பிறவிப்பயன்  எய்தும் இந்த மழலைக்கு உன் கடைக்கண் பார்வை கூடக்கிடையாதா...!!!
     புத்தனுக்கு போதி மரம்......
     இந்தப் பித்தனுக்கு ஏது மரம்..!!!!
முனிவரின் தவத்தையும் கலைக்க வழி இருக்க, வழி இல்லையோ என்னவளின் மௌனத்தைக் கலைக்க !!!!
மனித நேயம் இல்லாத மாதவியே..............
பயிற்சி பெறாமல் தேர்ச்சிப் பெற்ற நடிகை நீ.......
உன் கையில் என் உயிர் இருப்பது தெரிந்தும் இன்னும் உன் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறாய்......
ஏக்கத்தினும் ஒரு சுகம் உள்ளது....
காத்திருக்கிறேன் அச்சுகத்தோடு....
உன் மௌனத்தைக் கலைத்து, என் ஏக்கத்தைத் தணித்து , உயிரற்றவனான என்னை உயிர்ப்பித்துவிடு என்னவளே !!!!!!!!!!!
                           நா.ஸ்ரீதர்

Thursday, 5 July 2012

வறுமை(நிறம் சிவப்பு)

                         

உலகம் எனும் நாடக மேடையில் சில மாந்தர்கள் மலிவு விலையில் நடித்துக் கொண்டிருக்க காரணம் நீ......
வயிற்றைச் சுட்டெரித்தாலும் மனத்தில் கொள்கைத் தீயுடன் உன்னை வென்று வந்தோர் பலர்.....சரித்திரத்தைப் புரட்டிப் பார்......
காகித தாள்களால் நிர்ணயித்து ஒருவனிடம் உன்னைச் சேர்க்கும் இச்சமூகத்தை நான் பழிக்கின்றேன்.........
திறமைகள் இருப்பினும் அவற்றை உன் பசிக்கு காவு வாங்கிக்கொள்ளும் கொடிய நோய் நீ........
வறுமையுடையோருக்கு சுகாதாரக் குடிநீர் வழங்குவது கூட தேர்தல் அறிக்கையாகி உள்ளது....:-(
தொப்புள்கொடி அறுத்து வெளிவரும் சிசுக்கள் சிலவற்றுக்குத் தன் பிறப்புரிமை மறுக்கப்படுவது உன்னால்.....

இப்படை ஒன்று சேருமாயின் சரித்திரங்கள் மாற்றப்படும்......
மாற்றப்பட்டுள்ளது.........
சில சரித்திரங்கள் மாற்றப்படாதா என காத்திருக்கும் ஓர் இளைஞன்......

                                           நா.ஸ்ரீதர்..

Sunday, 1 July 2012


                  எழடா மானிடா !!


கலங்கரை வெளிச்சம் நோக்கிச் செல்லும்
கப்பல் போல் ,
கல்லரை செல்லும் வரை லட்சியத்தை நோக்கிச் செல்......

ஒன்பது மாத இருள் வாசம் தாளாமல் கருவறையைப்  பிளந்து இப்பூமிக்கு தன்னை யார் என்று காட்டிக்கொள்ளும் சிசுவின் நம்பிக்கையைப்  பார்......

தேய்ந்த போதும் அழிந்து விடமாட்டேன் என்று மீண்டும் மீண்டும் வளரும் மதியைப்  பார்.....

நரைமுடி வந்தேனும் பிற மாந்தர் பசி போக்க பயிர் செய்யும் கிழவனின் மன உறுதியைப் பார்.....

எத்துனை இன்னல்கள் வந்தபோதும் தன்னிலை மாறா பிரம்மாண்டத்தை விளக்கும் கம்பீரமான மலைகளைப் பார்....

இன்னும் ஏன் துவண்டுள்ளாய் .......

எழடா மானிடா....

ஐந்தறிவு மக்கட் கூட தான் இந்த பிரபஞ்சத்தில் வீற்றிருப்பது  மடிவதற்காக அல்ல என்று நினைத்து போராடும் போது ,
என் தோழனே நீ வீழ்வதற்காக வரவில்லை...

வாழ்வதற்காக....வாழ்விப்பதற்க்காக....

நம்பிக்கை எனும் மருந்தை மனம் எனும் உன் நண்பனுக்குக் கொடு.....

வீறு கொண்டு எழு....

வாழ்க்கையைப் போற்று....

தடைகளை உடை...

லட்சியத்தை அடை....

முழு மனிதனாய் விளங்கு என் அருமை தோழனே...!!!

                                       நா. ஸ்ரீதர்....